துணிகள் விற்பனையில் சிக்கல்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

துணி விற்பனையில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அபரிமிதமான நுால் விலை உயர்வு காரணமாக உற்பத்தியை பாதியாக குறைத்து இருந்தோம். நுால் விலை உயர்வுக்கு ஏற்ப, துணி விலை உயரவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் நுால் விலை குறைந்து வருகிறது.வரும் நாட்களில் நுால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், துணி விலையும் குறையும் என்ற எண்ணத்துடன், வியாபாரிகள் துணிகளை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட துணிகளும் விற்பனையாகாமல் உள்ளன.இப்பிரச்னைக்காக, ஈரோடு மாவட்ட பகுதி விசைத்தறியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். பஞ்சு, நுால் விலை குறைந்தால், மார்க்கெட் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக துணிகள் தேக்கமடைந்து வருகின்றன. நுால் விலை உயர்வால் நெருக்கடியில் இருந்த சூழலில், துணிகள் விற்பனையாகாதது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உற்பத்தி நிறுத்த போராட்டம் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended