Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூடப்பாக்கம் சேகர்ரெட்டியார் நினைவு தினம் பத்துகண்ணு பகுதியில் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், உள்ளிட்ட கட்சியின் மாநில வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சேகர்ரெட்டியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில்,.... புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வலுவான கட்சி ஓடுகாலிகளை நம்பி கட்சியில்லை, யார் கட்சியில் நிலைத்து இருக்கிறார்களோ அவர்களை நம்பி கட்சி நடத்த வேண்டும், ஐந்தாண்டு காலம் பதவி சுகங்களை அனுபவித்து விட்டு கட்சிக்கு துரோகம் செய்தால் நடுரோட்டில் தான் நிற்க்க வேண்டும் என்று சபித்த முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி.... முதல்வர் கனவில் கட்சியை விட்டு சென்றவர்கள் தொப்பி போட்டுக்கொண்டு சுற்றி வருவதாகவும் இவர்களுக்கு மானம், மரியாதை ஒன்றும் கிடையாது என்று கடுமையாக தாக்கி பேசினார். இவர்கள், அரசியலுக்கு வரவேண்டும் அரசியல் வியாபாரம் செய்ய வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும், ஏமாற்ற வேண்டும், பொய் சொல்ல வேண்டும் என்று தான் இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கடுமையாக தாக்கி பேசிய நாராயணசாமி ஒரு கட்சியில் இருக்கும் போது தன்மானம், மன உறுதி, கை சுத்தம் இருக்க வேண்டும், எதற்காக இவர்கள் கட்சியை விட்டு ஓடினார்கள் தெரியுமா என்று கேள்வி எழுப்பிய அவர் மோடி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, என்ற மூன்று மந்திரங்கள் வைத்திருப்பதாக கூறினார். கட்சியை விட்டு ஓடியவர்கள் இன்று உட்கார இடம் கூட இல்லாமல் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் என்ற அவர் தமிழ் நமது தாய்மொழி இந்தியில் அமீத்ஷாவை வரவேற்று பேனர் வைத்து தரங்கெட்ட அரசியல் செய்து வருவதாக நாராயணசாமி குற்றம்சாட்டினார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல். இன்றைய செய்திகள் புதுச்சேரி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் புதுச்சேரி,இன்றைய செய்திகள் புதுச்சேரி மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest pondichery news tamil,Tamil news daily,Pondichery today news tamil,Pondichery news live,Prime Minister Modi has three mantras: Income Tax Enforcement CBI,congress,bjp modi,pm modi

Tags:

Comments & Conversations - 0