• முகப்பு
  • district
  • ஸ்ரீமுஷ்ணம அருகே காவனூர் கள்ளிப்பட்டி இடையே கிடப்பில் போடப்பட்ட மேம்பாலத்தை உடனடியாக கட்டிக்கொடுக்க முன்வருமாறு - பிரேமலதா பேச்சு

ஸ்ரீமுஷ்ணம அருகே காவனூர் கள்ளிப்பட்டி இடையே கிடப்பில் போடப்பட்ட மேம்பாலத்தை உடனடியாக கட்டிக்கொடுக்க முன்வருமாறு - பிரேமலதா பேச்சு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளி பாடி காவனூர் இடையே கடந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆட்சியின்போது மேம் பாலம் அமைத்து தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பார்வையிட்டு விரைவில் பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடும் செய்வதாக உறுதியளித்தார். பிரேமலதா ஒரு திருமண விழாவிற்கு வந்த பொழுது கள்ளிப்பாடி காவனூர் பாலம் இதுநாள்வரை கட்டவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் . இதனை பார்வையிட பிரேமலதா செய்தியாளரிடம் கூறுகையில் ஏற்கனவே நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது முதல் கோரிக்கையாக பாலம் கட்டிக் கொடுப்பதாக சட்டசபையில் விஜயகாந்த் பேசிய பொழுது இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இதுநாள் வரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . திமுக ஆட்சி வந்தால் உடனடியாக நாங்கள் பாலம் கட்டி தருவதாக கூறிய முதல்வர் ஸ்டாலினும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பவழங்குடி காவனூர் , கீரனூர் ஆகிய சுமார் 12 ஊராட்சி மக்கள் ஸ்ரீமுஷ்ணம் அலுவலர் மற்றும் மருத்துவமனை பள்ளி கல்லூரி மாணவர்கள் சுமார் 35 கிலோமீட்டர் சுற்றி வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது ஏற்கனவே என்எல்சி நிர்வாகம் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி உள்ளது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை அதோடு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கப்படவில்லை . வேலை கொடுக்க வில்லை என்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார் . அதோடு சிதம்பரத்தில் தீட்சிதர்கள் காலங்காலமாக நடராஜ பெருமாளுக்கு தொண்டு செய்து வருகின்றனர். தற்போது இதில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு குற்றச்சாட்டுகள் , புகார்கள் எழுந்த நிலையில் ஆய்வுக் குழுவிற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவேண்டும் . மத்திய அரசுக்கு 35 எம்பிக்களும் பாராளுமன்றத்துக்கு சென்று பிரதமருக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அழுத்தம் தர வேண்டும் . அண்ணாமலையார் சுய விளம்பரத்திற்காக பேசுவதோடு சரி அவர் தனி விளம்பரம் செய்ய குற்றசாட்டு தினந்தோறும் கூறி வருகிறார் , ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் இவர் ஏன் தினந்தோறும் அறிக்கை விட வேண்டும் என தெரிவித்தார். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended