• முகப்பு
  • district
  • துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல அச்சப்படும் கர்ப்பிணி பெண்கள்?

துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல அச்சப்படும் கர்ப்பிணி பெண்கள்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியாக 46வது வார்டு விளங்குகிறது. இங்கு சுமார் 7000 மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையோர் கூலித் தொழிலும், சுயதொழிலும் செய்து வருகின்றார்கள். இவ்வளவு அதிக மக்கள் தொகை வசிக்கும் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடம் மிகுந்த சேதம் அடைந்து காணப்படுவதாலும், மழைக்காலத்தில் நீந்தி செல்லும் அவல நிலை உள்ளதாலும், துணை சுகாதார நிலையம் சுற்றிலும் முள்புதர்களும் பாம்புகளும் காணப்படுவதாலும் , கழிவறை சேதம் அடைந்து தண்ணீர் வசதி அறவே இல்லாததாலும் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் துணை சுகாதார நிலையத்துக்கு செல்ல மிகவும் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஓரிக்கை பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள செவிலிமேடு சுகாதார மையத்துக்கோ அல்லது சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கோ கர்ப்பிணி பெண்கள் செல்லுகின்ற துப்பாக்கிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தருவதாக திமுகவினர் வாக்குறுதி அளித்த நிலையில் 13 மாதங்கள் கடந்தும் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு ஏழாயிரம் மக்களுக்கு மேல் வசிக்கும் இந்த பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். பேட்டி - கயல்விழி - மாமன்ற உறுப்பினர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended