• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால் 10000 வரை அபராதம் காவல்துறையினர் எச்சரிக்கை.

போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால் 10000 வரை அபராதம் காவல்துறையினர் எச்சரிக்கை.

L.குமார்

UPDATED: May 15, 2023, 12:36:28 PM

காமராஜர் துறைமுகம் எல்என்டி துறைமுகம் நிலக்கரி முனையும் எண்ணைய் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான  கனரக வாகனங்கள் தினந்தோறும் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் திருவெற்றியூர் முதல் மீஞ்சூர் பொன்னேரி சாலைகளில் ஆங்காங்கு சாலையோரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் சென்று விடுகின்றனர்.

வாகன நிறுத்த வளாகத்தில் லாரிகளை நிறுத்தாமல் சாலையில் வாகனங்களை நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுவதால்,

இது குறித்து ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களிடம் போக்குவரத்து காவலர்கள் மற்றும் மீஞ்சூர் போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் அதனை கண்டு கொள்ளாததால் போக்குவரத்து போலீசார்,

இன்று சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளின் ஓட்டுனர்களை தேடி பிடித்து ஆயிரம் ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.

ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்களில் ரசீதை அதில் வைத்துச் சென்றனர்,  மேலும் தொடர்ந்து லாரிகளை சாலையில் நிறுத்துபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து லாரிகளை சாலையில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர்.

போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் துறையினரின் அதிரடி அபராதம் விதிப்பு காரணமாக ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended