• முகப்பு
  • விரைவு ரயிலில் போலீசார் அதிரடி சோதனை ?

விரைவு ரயிலில் போலீசார் அதிரடி சோதனை ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி : புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வாராந்திர விரைவு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விரைவு ரயிலில் கஞ்சா எடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் புதுச்சேரி ஐ.ஜி சந்திரன் தலைமையிலான போலீசார் சுமார் 20க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் புவனேஸ்வர் விரைவு ரயிலில் அதிரடியாக சோதனை செய்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமான 4 வாலிபர்கள் மடக்கி அவர்கள் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தனர், அந்த சோதனையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 36- வயதான உதிர்ஷா சாகு,26 வயதான திவ்ய ரங்கன் சாகு , 27-வயதான ரஞ்ஜன் 26-வயதான சார்ஜா நாயக், ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து ஐ.ஜி.சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது.. கஞ்சா விற்பனையை தடை செய்யும் வகையில் போலீசார் பல கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் ரயிலில் சோதனை நடத்தப்பட்டது . 350 கிராம் கஞ்சா மற்றும் 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் கஞ்சா விற்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல். இன்றைய செய்திகள் புதுச்சேரி ,இன்றைய முக்கிய செய்திகள் புதுச்சேரி,இன்றைய செய்திகள் புதுச்சேரி,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Pondichery news,crime news,kanja,abin,Gutka

VIDEOS

RELATED NEWS

Recommended