• முகப்பு
  • குற்றம்
  • திருட்டு வழக்கில் 4.30 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து அசத்திய விருதம்பட்டு போலீசார்!

திருட்டு வழக்கில் 4.30 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து அசத்திய விருதம்பட்டு போலீசார்!

வாசுதேவன்

UPDATED: May 23, 2023, 2:55:31 PM

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேனூர் கிராமம், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. இவரது மனைவி கௌரி. இவர் இவர் தனது உறவினர் இல்ல நிச்சயத்திற்கு சென்றுவிட்டார்.

இதனால் இவரது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இந்நிலையில் அதே சேனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கௌரி வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள்ளே புகுந்துள்ளார்.

அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3.90 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 11 1/2 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்றுள்ளார். இந்நிலையில் காலை 6 மணிக்கு வீடு திரும்பிய கௌரி தனது வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதையடுத்து உள்ளே சென்று பார்த்ததில் அவரது வீட்டின் பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் ரூ.3.90 லட்சம் மற்றும் 11 1/2 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கௌரி விருதம்பட்டு காவல் நிலையத்தில் நேற்று காலை 8 மணி அளவில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி உத்தரவின் பேரில், விருதம்பட்டு காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில், உதவி காவல் ஆய்வாளர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் உடனடியாக இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து தேட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் நண்பகல் 12:30 மணியளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க இளைஞரை கைது செய்து திருட்டுப் போன ரூ.3. 90 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 11 1/2 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை மீட்டனர்.

அதாவது 4:30 மணி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு திருட்டு வழக்கில் துப்புத் துலக்கி வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இளைஞரை கைது செய்து அவரிடமிருந்த திருடிச் சென்ற பணம், நகை ஆகியவற்றை பத்திரமாக மீட்டனர்.

இது காவல்துறையில் ஒரு மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம். திருட்டு வழக்கில் துப்பு துலக்குவது என்பது எமன் வாயில் சென்ற பொருளுக்கு சமம் என்று சொல்வது உண்டு.

அதற்கு ஏற்றார் போல திருட்டுப் போன பொருட்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பது அனைவரும் நன்கு அறிந்த உண்மை. ஆனால் விருத்தம்பட்டு போலீசார் அப்படி அசட்டுத்தனமாக இல்லாமல் சாதுரியமாக செயல்பட்டு 4:30 மணி நேரத்தில் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தி இருப்பது காவல்துறை வரலாற்றில் ஒரு மிகப் பெரிய சாதனை என்று சொல்லலாம்.

சேனூர் கிராமத்திலும் இதே பேச்சு தான் வீதிக்கு வீதி பேசப்பட்டு வருகிறது என்பதும் நிதர்சன உண்மை. இது போன்ற காவலர்கள் இருக்கும் வரை பொதுமக்களுக்கு எவ்வித குறையும் இல்லை என்று அடித்துக் கூறலாம்.

திருட்டு வழக்கில் உடனடியாக குற்றவாளியை கைது செய்து நகை மற்றும் பணத்தை மீட்டு கொண்டு வந்த விருதம்பட்டு போலீசாரை காட்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனி வெகுவாக பாராட்டி கௌரவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended