• முகப்பு
  • india
  • PM Kisan தவணைத்தொகை பணம் வரும்தேதி அறிவிப்பு.

PM Kisan தவணைத்தொகை பணம் வரும்தேதி அறிவிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

PM Kisan இந்தத் திட்டத்தின் 10வது தவணையை கடந்த ஜனவரிமாதம் 1 ம் தேதி 2022 அன்று வீடியோ கான்பரன்சிங்மூலம் பிரதமர் வெளியிட்டார். 11 ஆவது தவணை விரைவில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப் பட உள்ளது. பிரதமர் கிசான்சம்மன் நிதியால் நாடு முழுவதும் உள்ள 12.50 கோடி விவசாயிகள் இப்பொழுது பலனடைவார்கள். பணம் ஏப்ரல் மாதம் 1 முதல் ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் வழங்கப் படும் விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் 11 ஆவது தவணையை தரும் தேதி குறித்து அறிவித்து உள்ளார். மத்திய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த விவசாய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண் அமைச்சர் இதனை செய்தியாளர்கள் வாயிலாக அறிவித்து உள்ளார். கிசான்சம்மன் நிதி 11 ஆவது தவணையை மே 31 ம் தேதி பிரதமர் நாடு முழுவதும் உள்ளதகுதி உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் வங்கிக் கணக்கு வாயிலாக வழங்க உள்ளார். அவர் கூறியது இறுதியாக 2021 ம் ஆண்டு மே மாதம் 15 ம் தேதி ₹ 2,000/- ரூபாய் மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப் பட்டது. தற்போது இந்த ஆண்டு மே 15 ம் தேதி கடந்து விட்டதால் விவசாயிகள் விரைவாக பணத் தொகையை வழங்க கோரிக்கை வைத்து உள்ளார்கள். e-KYC இந்த முறை 11 ஆவது தவணையை பயன் படுத்த கட்டாயம் e-KYC செய்ய வேண்டியது அவசியம் என ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. 12.50 கோடியில் 80 சதவீத விவசாயிகள் தங்களது e-KYC வெற்றிகரமாக பதி வேற்றம் செய்யப் பட்டு விட்டதாக அரசு அறிவித்து உள்ளது. விவசாயிகள் e-KYC இணைய தளம் மற்றும் இணைய தளம் இல்லாத முறையில் e-KYC பதிவேற்றம் செய்யலாம் மேலும் வீட்டில் இருந்தபடியே Pm Kisan இணையதளத்தை பயன் படுத்தி இந்த e-KYC செயல் முறையை செய்து கொள்ளலாம். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended