• முகப்பு
  • கால்நடை பராமரிப்புத்துறையில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம்.

கால்நடை பராமரிப்புத்துறையில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கால்நடை மருந்தகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆதவற்ற , கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஏழ்மை நிலையிலுள்ள விதவைகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 100 பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை வகித்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பூண்டி.கே.கலைவாணன் தெரிவித்ததாவது… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற 11 மாதங்களில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின்(2021-2022) கீழ் ஆதவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஏழ்மை நிலையிலுள்ள விதவைகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகளை வழங்கும் இன்றைய தினம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1000 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்றைய தினம் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட அம்மையப்பன் கால்நடை மருந்தகத்தில் 100 பயனாளிகளுக்கு தலா ரூபாய் இரண்டாயிரம் மதிப்பிலான 5 ஆடுகள்; பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur news,Breaking thiruvarur news,Latest thiruvarur news,Project to develop women entrepreneurs in the animal husbandry sector

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended