குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு.

இடும்பன்

UPDATED: May 7, 2023, 8:38:45 AM

கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பரிசமங்கலம் 6 வது வார்டு கிராம மக்கள் அண்ணா கிராமம் ஒன்றிய கிராம ஊராட்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது: எங்கள் கிராமத்தில் ஏறத்தாழ 450-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகிறோம் எங்களுக்கு குடிநீர் பிரச்சினை அதிக அளவில் இருந்து வருகிறது.

இதனால் குடிநீருக்கு நாங்கள் பெரிதும் சிரமப்படுகிறோம், ஏற்கனவே இருக்கும் நீர் தேக்க தொட்டியானது மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இதனை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் எனவும்

எங்களின் அடிப்படை வசதிகளான நியாய விலை கடை, சாலைகள், கலையரங்கம், கரும காரிய மண்டபம், அங்கன்வாடி சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகும் எங்களை பெரும் துயரிலிருந்து மீட்குமாரும் ஊர் பொதுமக்கள் சார்பாக மனு கொடுத்தனர்.

விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எங்களின் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended