• முகப்பு
  • மக்கள் அதிகாரம் சார்பில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மக்கள் அதிகாரம் சார்பில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் சார்பில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான எழுவர் விடுதலை மற்றும் கோவை குண்டுவெடிப்பில் விசாரணைக் கைதிகளாக கைதாகி இருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம்  மனு அளிக்கப்பட்டது. மக்கள் அதிகாரத்தின் மண்டல அமைப்பாளர் சண்முகசுந்தரம் அளித்துள்ள இந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதல்வருக்கு என குறிப்பிடப்பட்டிருப்பதாவது,தமிழக அரசு பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்வதாக அறிவித்து இருந்தது. அதன் பேரில் 700 பேரை விடுவிப்பதாக அரசு அறிவித்திருக்கிறது, ஆனால் இந்த அறிவிப்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேர் மற்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கும் 20 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணையிலேயே இருக்கிறது. தண்டனை வழங்கப்படாமல் இத்தனை ஆண்டுகளாக சிறையில் வைத்திருப்பது என்பது மிகப்பெரும் கொடுமையாகும். எனவே தமிழக அரசு கைதிகளின் விடுதலை பட்டியலில் இவர்களையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை  கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி செயலாளர் சுல்தான் ஆரிபின், அமைப்புச் செயலாளர் உமர் பாரூக், நகர தலைவர் முகமது ஷெரீப், சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் சங்க கிளை தலைவர் மோகன், மக்கள் அதிகாரம் மாவட்ட குழு உறுப்பினர் ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended