Author: மகேஷ் பாண்டியன்

Category: மாவட்டச் செய்தி

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் ஊராட்சிக்கு செந்தமான ஜல்லிக்குட்டை என்ற சுமார் 80ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.

சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஜல்லிக்குட்டை நீர்நிலைக்கு அதன் அருகிலுள்ள வேதகிரிமலையில் இருந்து வரும் அதிகபடியான மழைநீரானது கொப்பு வாய்க்கால் மற்றும் கால்வாய் வழியாக நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டிருக்கும் நீர்வழிப்பாலத்தின் வழியே ஜல்லிக்குட்டை நீர்நிலையை வந்தடைகிறது, 

இதனால் குளம் நிரம்பி பின் மதகின் வழியே வெளியேறும் நீரானது பல சிறு குளங்களை கடந்து நல்லூர் மற்றும் புங்கம்பள்ளி குளத்திற்கு சென்றடைகிறது.

இதனால் ஜல்லிக்குட்டை மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 850 ஏக்கர் நிலத்தடிநீர்  உயர்ந்து விவசாயத்திற்கு உதவுகிறது.

தற்போது இந்த குளத்தில் பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை ஜல்லிக்குட்டை குளத்தில் புதைத்து வருவதால் இந்த நீர்நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

ஜல்லிக்குட்டை நீர்நிலையை நம்பி அப்பகுதி விவசாயிகள் உள்ளதால் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தருமாறு துணை ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை அடுத்து நில நிர்வாகத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பின் இந்த குளத்திற்கு வரும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தருமாறு ஜல்லிக்குட்டை குளத்தில் களஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு துணை ஆட்சியர் நிலநிர்வாகத்துறை ஆணையர் நாகராஜன் அவர்களிடம்,

ஈரோடு வடக்கு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பாரதி ஜனதா கட்சி, விவசாய அணி ஈரோடு, மாவட்டம் ஜல்லிக்கட்டை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு, காலி சேனை, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்பினர் மனுஅளித்தனர்.

Tags:

#erodenews, #erodenewstoday , #erodenewspapertoday , #erodenewspaper, #erodenewschannel , #erodenewsupdate, #erodelatestnews, #erodenews , #erodenewstodaylive , #erodelatestnews, #latestnewsinerode ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ஈரோடு , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalerode , #todaynewserodetamilnadu , #ஈரோடுசெய்திகள்
Comments & Conversations - 0