Author: THE GREAT INDIA NEWS

Category:

காஞ்சிபுரம் : கோயில் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அய்யங்கார்குளம் ஊராட்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற சஞ்சீவராயர் என்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பின்புறம் கோடையில்கூட வற்றாத குளமும், எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும். நடவாவிக் கிணறும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் உள்ள கல் மண்டபமும் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடவாவி உற்சவம் நடைபெறுவதையொட்டி கோயிலிருந்து வரதர் கிளம்பி செவிலிமேடு, அப்துல்லாபுரம், உள்ளிட்ட இடங்களில் அளிக்கப்படும் மண்டகப்படியை ஏற்றுக் கொண்டு, அய்யங்கார்குளம் கிராமத்திலுள்ள சஞ்சீவராயர் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரதர் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பலித்தார் . அங்கு பக்தி உலா முடிந்ததும் நடவாவி கிணத்துக்கு வரதர் புறப்பட்டார். அவரை வரவேற்கும் விதமாக நடவாவி கிணற்றின் உள்பகுதியில் அமைந்துள்ள மண்டபம் மற்றும் நடைபாதை பகுதிகளை சுத்தப்படுத்தி சுவாமியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இரவு, வரதராஜ பெருமாள், உபய நாச்சியார்களுடன் நடவாவி கிணற்றுக்குள் எழுந்தருளினார். சுவாமிகளுக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நடவாவி கிணற்றில் எழுந்தருளிய பெருமாளை கோவிந்தா கோவிந்தா என அழைத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் நடவாவி கிணற்றிலிருந்து புறப்பட்டு செவிலிமேடு பாலாற்றில் வழிமேல் விழி வைத்து காத்திருந்த பக்தர்களுக்கு காட்சி அளிக்க புறப்பட்டு சென்றார். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,ஆன்மீகம்,aanmeegam,anmigam,anmeegam,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily

Tags:

Comments & Conversations - 0