புற்று நோய்க்கு நிரந்தரத் தீர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அமெரிக்காவில் புற்று நோய்க்கு எதிராக கண்டு பிடிக்கப்பட்டு உள்ள மருந்து சோதனையில் புற்று நோயை முற்றிலும் குணப் படுத்தி உள்ளது. சோதனையில் கலந்துகொண்ட புற்று நோயாளிகளும் இந்தமருந்து எடுத்துக் கொண்ட பின் குணமடைந்தசம்பவம் உலக அளவில் கவனம் பெற்று உள்ளது. மெமோரியல்ஸ்லோன் கெட்டரிங் கேன்சர்சென்டர் நடத்திய சிறியமருத்துவ பரி சோதனையில், பதினெட்டு புற்று நோயாளிகள் சுமார் ஆறுமாதங்களுக்கு டோஸ்டார்லிமாப் ( Dostarlimab ) என்றமருந்தை உட்கொண்டனர், இறுதியில், அவர்கள்மேற்கொண்டசோதனையில் புற்று நோய் செல்கள் மறைவதை கண்டறிந்தனர். டோஸ்டார்லிமாப் என்பது பல்வேறுமூலக்கூறுகளைக்கொண்ட ஒரு மருந்து. மனிதஉடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்று நோயாளிகள் கீமோதெரபி, கதிர் வீச்சு, அறுவைசிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டால், குடல்மற்றும் பல்வேறு உடலுறுப்புசெயலிழப்பை ஏற்படுத்தும் அபாயம்உள்ளது.  எனவே பதினெட்டு நோயாளிகள் அடுத்தகட்டமாக  டோஸ்டார்லிமாப்மருந்து சோதனைக்குச்சென்றனர். அவர்களுக்கு ஆச்சரியமாக சிகிச்சையில்லாமல்  டோஸ்டார்லிமாப் மருந்தால்குணமாகியுள்ளது. எம்.ஆர்.ஐ, பி.இ.டி எனப்படும் அனைத்துசோதனையிலும் புற்றுநோய்செல்கள் உடலில்லில்லை என்பதுறுதி செய்யப்பட்டு உள்ளது. டோஸ்டார்லிமாப்மருந்தால் இயற்கையாக புற்று நோய் செல்கள்அழிகின்றன.  டோஸ்டார்லிமாப் மருந்து பக்கவிளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. மோசமானநிலையை அடைந்தவர்களைக்கூட இந்த மருந்து குணமாக்கியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போது ஒன்பது லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள். டோஸ்டார்லிமாப்மருந்தை மதிப்பாய்வுசெய்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள், சிகிச்சையானது நம்பிக்கைக்கு உரியதாகத் தெரிகிறது. ஆனால் பெரியளவிலான சோதனைதேவையென்றும்,  இந்த மருந்து எத்தனைகாலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சி சந்தேகம் உள்ளதால் அதைப்பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் செய்யப் படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended