• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விடியாத திமுக ஆட்சி என்பதை பாறைசாற்றும் கருக்குப்பேட்டை ஊராட்சி மன்ற பெண் தலைவரால் மக்கள் கொந்தளிப்பு.

விடியாத திமுக ஆட்சி என்பதை பாறைசாற்றும் கருக்குப்பேட்டை ஊராட்சி மன்ற பெண் தலைவரால் மக்கள் கொந்தளிப்பு.

லட்சுமி காந்த்

UPDATED: May 31, 2023, 7:10:18 PM

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலையில் வாலாஜாபாத் ஒன்றியத்தில் கருக்குபேட்டை ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.15 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 

கருக்குபேட்டை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தாம்பரம் சென்னை மார்க்கமாகவும் , செங்கல்பட்டு கல்பாக்கம் மார்க்கமாகவும், செங்கல்பட்டு பாண்டிச்சேரி, திருச்சி மார்க்கமாகவும் செல்கின்றது.

கருக்குப்பேட்டை ஊராட்சியின் தலைவராக திமுக கட்சியை சேர்ந்த ராஜஸ்ரீ விமல் என்ற பெண் தலைவர் உள்ளார்.

திமுக கட்சியை சேர்ந்த இவருடைய கணவர் விமல் அங்குள்ள கடைகளில் அதிகமாக வரி போட்டு பணத்தை முறைகேடு செய்ய முயன்று சிக்கலில் மாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புவார்கள். 

இந்நிலையில் செங்குந்தர் வீதி முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 20க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியவில்லை. இதை பயன்படுத்தி கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை நடைபெறுகின்றது என பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அதேபோல் தெருவிளக்குகள் எழியாததால் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மாநில சாலையில் இருந்து எங்கள் ஊராட்சிக்குள்ளே நுழைந்து தலைமறைவாகும் சூழ்நிலையும் உள்ளது. அதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றன.

தெரு விளக்குகள் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ விமல் அவர்களிடம் முறையிட்டும் இவ்வளவு நாட்களாக எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை.

மேலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் உள்ளனர் என அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கொந்தளிக்கின்றன.

மேலும் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரம் வருகின்ற பெண்கள் மிகுந்த அச்சத்துடன் வீட்டுக்கு செல்கின்றனர். பல பெண்கள் இரவு நேர ஷிப்டுக்கு செல்வதை தற்காலிகமாக கைவிட்டு உள்ளனர்.

நீண்ட சாலையான செங்குந்தர் வீதியில் கையில் டார்ச் லைட் உடன் இரவு நேரத்தில் பலர் தெருக்களில் நடமாடுவதை காண முடிகிறது.

அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னதாக அனைத்து தெருவிளக்குகளும் உடனே எரிய வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended