• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 10, 2023, 7:18:29 PM

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், இன்று (மே.10) காலையில் நடைபெற்றது.

மாநகர காவல் ஆணையாளர் சு.ராஜேந்திரன், இக்கூட்டத்தில் பங்கேற்று, மொத்தம் 28 மனுதாரர்களிடமிருந்து, மனுக்களை பெற்றுக்கொண்டு, ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

அப்போது தலைமையிடத்து காவல் துணை ஆணையர் ஜி.எஸ்.அனிதா உடனிருந்தார். இதுபோல, பாளையங்கோட்டை சமாதானபுரம், மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் பங்கேற்று, மொத்தம் 23 பேரிடமிருந்து மனுக்களை பெற்றார்.

"பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!"- என, அப்போது மனுதாரர்களிடம், காவல் கண்காணிப்பாளர் கூறினார். இந்த கூட்டத்தின் போது, நிலுவையில் இருந்த 108 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றுள் 94 மனுக்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

ஒருநாள் குறை தீர்ப்பு கூட்டத்திலேயே இவ்வளவு மனுக்கள் முடிவுக்கு வரும் பட்சத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் வைத்தால் எவ்வளவு குறைகள் தீர்க்கப்படும் என்று பாதிக்கப்பட்டவர்களின் கேள்வியாக உள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended