Author: THE GREAT INDIA NEWS

Category:

குமரி மாவட்டம் உண்ணாமலைகடை பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் கரையில் அரசு விதிகளை மீறி செங்கல் சூளை என்ற பெயரில் மண் கடத்தி விற்கப்படுவதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு. மண் தோண்டி எடுக்கப்பட்டதால் வீடுகளை சுற்றி பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும் போது அந்த பகுதியில் வெள்ளம் புகுந்து அந்த வீடுகள் இடிந்து உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை கண்காணித்து தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறை அலுவலர்கள், கனிமவளத்துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் என யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை. எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தன்னை இயற்கை ஆர்வலராக காட்டிக்கொண்டு போராட்டங்கள் நடத்திய மாவட்ட அமைச்சர் இந்த கனிமவள கொள்ளையை தடுப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

Tags:

Comments & Conversations - 0