Author: THE GREAT INDIA NEWS

Category: crime

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டை ஊராட்சியில் அனுமதி ஏதும்‌ பெறாமல் செங்கற் சூலைக்காக கன்னிக்கோயில் தெருவில் விவசாய நிலத்தில் மணல்அள்ளுவதாக கிட்டத்தட்ட ஐநூறு மேற்பட்ட டிப்பர் லாரியில் மணல் எடுக்கப்பட்டதாக சீர்காழி‌ வட்டாச்சியர செந்திலிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனராம் . அதற்கு வட்டாச்சியர் செந்தில் , அவர்கள் நிலத்தில் அவர்கள் எடுக்கிறார்கள் அதையெல்லாம்‌ ஒன்றும் செய்ய முடியாது என்று அப்பகுதி மக்களிடம் கூறினாராம். இதைக்கேட்ட பகுதி மக்கள் வேதனை‌ அடைந்து சீர்காழி கோட்டாச்சியர நாராயணன் அவர்களிடம் தெரிவித்தனராம், உடனே மணல் அள்ளிய இடத்திற்கு சென்ற கோட்டாச்சியர் அதிர்ச்சி அடைந்தாராம் . அந்த அளவிற்கு மணல் அள்ளியதை கண்ட கோட்டாச்சியர் நாராயணன் அவர்கள் வட்டாச்சியர் வி ஏ ஒ. மற்றும் விசாரிப்பு ஆகியோரை அழைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சர்வேயரிடம் சொல்லி நிலத்தை அளக்க செய்ய வேண்டும். செங்கற்சூலை அதிபரிடம் லைசென்ஸ் எடுத்து வர சொல்ல வேண்டு‌ம்‌ என கண்டிப்புடன் கூறினார் . இதனால் அப்பகுதி மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர் . மேலும்‌ இவ்விவசாய நிலத்தில் மணல் திருடு‌ நடைப்பெறாமல் இருக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். மயிலாடுதுறை செய்தியாளர் செல்வராஜ்.

Tags:

#இன்றையசெய்திகள்மயிலாடுதுறை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #mayuladudhurai #peoplestruggle #mayuladuthuainewstoday #mayuladuthurailatestnews #formers #formersland
Comments & Conversations - 0