• முகப்பு
  • அரசு மருத்துவமனையில் சுகாதாரமின்றி , குடிநீரின்றி நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவத??

அரசு மருத்துவமனையில் சுகாதாரமின்றி , குடிநீரின்றி நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவத??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் உள் மற்றும் புற நோயாளிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் இடமாக விளங்குகின்றது. காஞ்சிபுரம் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில மாதமாக மருத்துவமனையில் குடிக்க குடிநீர் இன்றி நோயாளிகளும் பொதுமக்களும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு, மாத்திரைகள் வழங்கும் இடம் , உள்ளிட்ட 4 இடங்களில் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட எந்திரங்கள் பழுதாகி குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் உள் மற்றும் புற நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர் என நாம் ஏற்கனவே நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் செயல்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பழுது ஏற்பட்டு அந்த வளாகத்தில் தங்கி உள்ள 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், பிரசவம் ஆன பெண்கள், அவர்களின் உறவினர்கள் என அனைவரும் தண்ணீரின்றி அல்லல்பட்டு வருகின்றனர் இதுமட்டுமல்லாமல் இந்த வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் குளிப்பதற்கும், கழிவறை சென்று கால் கழுவுவதற்கும் தண்ணீரின்றி பெண் நோயாளிகள் மிகவும் துன்பப்படுகின்றனர். அதேபோல் கழிவறைகளும் சேதமடைந்து, சுகாதாரம் மற்றும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசு தலைமை மருத்துவமனையில், நிர்வாக கோளாறு காரணமாக, நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை வசதிகள் எதுவும் சமீபகாலமாக கிடைக்கவில்லை நோயாளிகள் வேதனைப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அரசு தலைமை மருத்துவமனையில் பழுதாகி போன அனைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்களையும் சீர் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீரின்றி நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி. ___________________________________ காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் உள் மற்றும் புற நோயாளிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் இடமாக விளங்குகின்றது. காஞ்சிபுரம் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில மாதமாக மருத்துவமனையில் குடிக்க குடிநீர் இன்றி நோயாளிகளும் பொதுமக்களும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு, மாத்திரைகள் வழங்கும் இடம் , உள்ளிட்ட 4 இடங்களில் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட எந்திரங்கள் பழுதாகி குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் உள் மற்றும் புற நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர் என நாம் ஏற்கனவே நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் செயல்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பழுது ஏற்பட்டு அந்த வளாகத்தில் தங்கி உள்ள 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், பிரசவம் ஆன பெண்கள், அவர்களின் உறவினர்கள் என அனைவரும் தண்ணீரின்றி அல்லல்பட்டு வருகின்றனர் இதுமட்டுமல்லாமல் இந்த வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் குளிப்பதற்கும், கழிவறை சென்று கால் கழுவுவதற்கும் தண்ணீரின்றி பெண் நோயாளிகள் மிகவும் துன்பப்படுகின்றனர். அதேபோல் கழிவறைகளும் சேதமடைந்து, சுகாதாரம் மற்றும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசு தலைமை மருத்துவமனையில், நிர்வாக கோளாறு காரணமாக, நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை வசதிகள் எதுவும் சமீபகாலமாக கிடைக்கவில்லை நோயாளிகள் வேதனைப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அரசு தலைமை மருத்துவமனையில் பழுதாகி போன அனைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்களையும் சீர் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் காஞ்?

VIDEOS

RELATED NEWS

Recommended