• முகப்பு
  • tamilnadu
  • கருப்பு உடையுடன் பணிக்குவந்த பகுதி நேர ஆசிரியர்.

கருப்பு உடையுடன் பணிக்குவந்த பகுதி நேர ஆசிரியர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பதினோரு வருடங்களாக பணி நிரந்தரம் ஆகும் என காத்திருந்து ஏமாந்ததால் பகுதி நேர ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர். டிபிஐ வளாகத்தில் இரண்டு முறை கோரிக்கை கூட்டம் நடத்தி பார்த்தனர். பலனில்லை. இதனை பலவகைகளில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். முதலமைச்சர் மற்றும் கல்வி துறை அமைச்சர் போகும் இட வழிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை பேனர் பிடித்தும் , கோரிக்கை மனுவை கொடுத்தும் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்து பார்த்தனர். தமிழக அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டு, ஊடகத்துறையினர் எப்போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கேட்டால்.... அதற்கு பகுதி நேர ஆசிரியர்கள் ஐந்து வருடங்களில்பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கல்வி துறை அமைச்சர் பேட்டியளித்தார். ஏற்கனவே 11 வருடங்கள் வாழ்க்கை வீணாக போனதால் விரக்தி அடைந்த பகுதி நேர ஆசிரியர்கள் மேலும் மன உளைச்சலில் உள்ளனர். தேர்தல் வாக்குறுதியாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தாலும். நிதி இல்லை என காரணம் காட்டி பணி நிரந்தரத்தை தமிழக அரசு புறக்கணித்தது. இருப்பினும் நிதி இல்லை என கூறிய அரசு மக்களுக்கு முக்கியத்துவமற்ற திட்டங்களை செயல்படுத்துவதை முனைப்புக்காட்டியது. சமீபத்தில் தான் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி நிலுவையை தமிழக அரசிற்கு அளித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது. நிதி இல்லை என கூறிய அரசு இதே துறைகளில் நிரந்தரப் பணியாளர்களை தகுதி தேர்வு மூலம் பணியில் அமர்த்த முனைப்புக்காட்டி வருகிறது. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் விரக்தி அடைந்தனர். தமிழக அரசால் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய முடியும் நிதி தாராளமாக அரசிடம் உள்ளது. ஆனால் மனசு தான் இல்லை என பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகின்றனர். பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆகாததால் தனது விரக்தியயை வெளிகாட்ட பகுதி நேர ஆசிரியர் ஒருவர் பள்ளி திறந்த முதல் நாளில் கருப்பு வண்ண உடையணிந்து பணிக்கு வந்து தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். இவர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆனந்தூர் RS மங்களம் ஒன்றியம் இராமநாதபுரம் மாவட்டம் சி.வீரமணிக்குமார் பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஆவார். தேர்தலறிக்கையில் கூறியபடி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யும் வரை இதே உடையில் வரப்போவதாக பணி நிரந்தரம் ஆகாத விரக்தியில் இவர் கூறியுள்ளார். தி கிரேட் இந்தியா நியூஸுக்காக செய்தியாளர் பா. கணேசன் (அனுபவஸ்தன்)

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended