• முகப்பு
  • district
  • மகனின் இறப்புக்கு நீதி கேட்டு பெற்றோர்கள்,கிராம மக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மகனின் இறப்புக்கு நீதி கேட்டு பெற்றோர்கள்,கிராம மக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா. இவர் சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையத்திலுள்ள சர்க்கரை ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பணி முடிந்து இரவு உறங்கச் சென்ற நிலையில், காலையில் ஜெயசூர்யா பிணமாக கிடப்பதை கண்டு அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து குடும்பத்தினர் சென்று இறந்த ஜெயசூரியாவின் உடலை பார்த்தபோது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததாக தெரிய வந்தது. இதனை கொலை வழக்காக பதிய வேண்டும் என தெரிவித்த போது காவல்துறையினர் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயசூர்யா பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் புவனகிரி- விருத்தாசலம் சாலையில் மிராளூர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர . அப்போது ஜெயசூர்யாவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெயசூர்யாவின் இறப்பை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர். இதனால் புவனகிரி விருத்தாசலம் சாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் , ஆனாலும் அவர்களது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டடமல் அதனை கிராம மக்கள் எதிர்த்தனர். பின்பு இறந்த ஜெயசூரியாவின் தரப்பினரால் கோரிக்கை மனுவை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினர். பின்னர் சாலை மறியல் செய்தவர்கள் உடனடியாக களைந்து செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended