• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருச்சியில் உலக நன்மைக்காக அக்னி மத்தியில் அமர்ந்து பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் பஞ்சாக்கினி தவம் செய்தார்"

திருச்சியில் உலக நன்மைக்காக அக்னி மத்தியில் அமர்ந்து பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் பஞ்சாக்கினி தவம் செய்தார்"

JK 

UPDATED: May 15, 2023, 12:41:00 PM

சென்னை அம்பத்தூர் யோக மையம் புவனேஸ்வரி மடாதிபதி ஜெகத்குரு பரமஹம்சர் பரத்வாஜ் சுவாமிகள்  சுட்டெரிக்கும் அக்னி வெயிலின் தாக்கம் குறையவும், வருண பகவான் மழை பொழிந்து பூமித்தாய் அகமகிழ்ந்து விவசாயம் செழித்து விவசாயிகள் மகிழ்ச்சி பெற,

மற்றும் கொரோனா போன்ற கடும் தொற்று நோய்கள் மக்களை தாக்காமல் இருக்க வேண்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் ஜெகத்குரு பரமஹம்சர் பரத்வாஜ் சுவாமிகள் தேவ காலத்து ரிஷிகள், முனிவர்கள் மேற்கொண்ட இந்த தவத்தை செய்தார். 

பரத்வாஜ் சுவாமிகள் விரதம் இருந்து மஞ்சள் நீராடி நான்கு புறமும் அக்னி வளர்த்து சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று மணி நேரம் அக்னி ஜூவாலை மத்தியில் அமர்ந்து மனமுருகி வராகி பஞ்சாக்கினி தவம் செய்தார்.

இந்த தவத்தின் போது பக்தர்கள் அருகே அனுமதிக்கப்படவில்லை. சிறு வயது முதல் பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் உலக நன்மைக்காக பல விதமான பூஜைகளை நடத்தி வருகிறார். 

300 வது முறையாக உலக நன்மைக்காக பஞ்சாகினி தவம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended