• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடிப்பு.

பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடிப்பு.

ஆர்.தீனதயாளன் 

UPDATED: May 23, 2023, 8:02:46 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பாபநாசம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தினமும் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் பயணிகள் டிக்கெட் எடுத்துள்ளார்கள்.

அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் கூடுதலான 3 ரூபாய் தொகை வாங்குகிறீர்கள் என்று பயணிகள் கண்டக்டரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு கண்டக்டர் ஓனரிடம் கேளுங்கள் என்று திமிராக கூறியுள்ளார், பயணிகள் உரிமையாளரிடம் அலைபேசியில் அழைத்து கேட்ட பொழுது மிஷின் பழுதானால் வாங்குகிறார்கள் விரைவில் சரி செய்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

எனவே ஆத்திரமடைந்த பயணிகள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பேருந்து நின்றபோது இறங்கி வந்து பஸ் முன்பாக நின்று எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று பேருந்தின் முன்பு கோஷம் முழக்கமிட்டனர்.

செய்தி அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நாங்கள் பேசுகிறோம் என்று கூறியதால் பயணிகள் பஸ்ஸை விடுவித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அரசு நிர்ணயத்த பயண சீட்டு தொகையை விட தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பாபநாசம் காவல்துறை ஆய்வாளர் அனிதா கிரேசி மற்றும் பயணிகளை சமாதான படுத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended