Author: இடும்பன்

Category: அரசியல்

உலக செவிலியர் தினம் செவிலியர்களை போற்றுவோம் உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் ஒவ்வொரு ஆண்டும் மே 12ஆம் தேதி ப்ளாரென்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும் செவிலியர்களை கௌரவிக்கும் வகையிலும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மோசமான நோய்களுடன் உள்ள நோயாளிகளுக்கு நெருங்கி சேவை செய்யும் செவிலியர்கள் பல்வேறு வகையான நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது இரவு பகல் பாராது கடுமையாக உழைக்கும் அவர்கள் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகவும் நேரிடுகிறது இதை இதையெல்லாம் தாண்டி பலரையும் நோயிலிருந்து மீட்கவும் தேவையில்லாமல் நிகழும் மரணங்களை தடுக்கவும் மருத்துவர்களுடன் இணைந்து மகத்தான சேவையில் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகத்தையே அச்சுறுத்துக் கொண்டிருக்கிற கொரோனா காலத்தில் ஊன் உறக்கமின்றி இரவு பகல் பாராது பணியாற்றியனர் பாதுகாப்பான கவச உடைகளை அணிந்தால் பல மணி நேரம் இயற்கை உபாதைக்காக கூட செல்ல முடியாது தங்கள் குடும்பத்தினர் குழந்தைகளைப் பிரிந்து எந்த நேரத்திலும் கொரோனா நோய் தாக்கக்கூடும் என்ற ஒரு வித அச்சத்திலேயே பணிகளை குறைவின்றி செய்தனர்.

இப்படி மகத்தான சேவையாற்றி வரும் செவிலியர்களை போற்றும் வகையில் உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது இத்தருணத்தில் அன்பின் இருப்பிடம் தியாகச்சுரல் பொறுமையின் சிகரம் சேவையின் மறு உருவமாக திகழும் செவிலியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாரும் என்றும் நலமுடன் வாழ தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரிடர் கால பணிகளில் அர்ப்பணிப்பு உணருடன் துணை நிற்கும் செவிலியர்களின் நலன்களுக்காகவும் உரிமைக்காகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதையும் கூறிக் கொள்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டார்.

Tags:

#Cuddalorenews , #cuddalorenewstoday , #velmurugan #cuddalorenewstodaylive , #srimushnamnews , #panrutinews #panrutitodaynews #panrutitodaytamilnews #srimushnamlatestnews , #srimushnamtodaynews , #cuddalorenewsyesterday , #cuddalorenewsintamil , #cuddalorenewspapertoday , #இன்றையசெய்திகள்கடலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalcuddalore , #todaynewscuddaloretamilnadu ,#Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0