ஆரணி சேவூரில் ஜெயின் மதத்தினர்  நடத்திய பஞ்ச கல்யாண பெருவிழா!  

வாசுதேவன்

UPDATED: May 11, 2023, 2:16:48 PM

திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி வட்டம், சேவூர் ஊராட்சியில் ஸ்ரீ ஆதி பகவான் கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் ஊர்வலம் தொடங்கி மேள தாளத்துடன் யானை, குதிரை சாரட் வண்டிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் சுமார் 11 மணி அளவில் சேவூர் பி என் எம் என் மண்டபத்திலிருந்து சுமார் ஆயிரம் (1000) பெண்கள் கலசத்துடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டு பஜார் வீதி வழியாக வந்து சேவூர் ஜெயினர் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ ஆதி பகவான் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு புனித நீரை ஊற்றி பஞ்ச கல்யாண பெருவிழாவை நடத்தினர்.

ஊர்வலத்தில் ஜெயினர் மதத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒரே கலரில் சேலை கட்டியும், இளைஞர்கள் அனைவரும் ஒரே கலரில் டீ-சர்ட் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தவளை கீர்த்தி சுவாமிகள் மேல்சித்தாமூர் இளைய மடாதிபதி பங்கேற்று சிறப்பித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended