• முகப்பு
  • district
  • ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்தநாள் ஓவியப் போட்டி .

ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்தநாள் ஓவியப் போட்டி .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் 175 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடி அப்புவர்மா ஆர்ட் கேலரி லயன்ஸ் சங்கம் மற்றும் லலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக அப்பு வர்மா இலவச ஓவிய பயிற்சி பள்ளி துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்ட  நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன்,நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து கிராமப்புற பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையிலும்,அவர்களுக்குள் இருக்கும் ஓவியத் திறனை வெளிக்கொணரும் வகையிலும் அப்பு வர்மா இலவச ஓவிய பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது.இதில் மாணவ மாணவிகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி வழங்கப்படும். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இதன் நிறுவனர் ஓவியர் அப்பு வர்மா தெரிவித்தார்.முன்னதாக மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய ஓவியர் அப்பு வர்மா எனது ஓவியக் கலைக்கு நிரந்தர குரு என்று யாரும் இல்லை எனது ஆசிரியர்களின் ஊக்கம்தான் ஓவியத் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. நான் ஓவியர் ராஜா ரவி வர்மாவை எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவன் என்பதால் அவரது பிறந்த நாளில் இந்த ஓவியப் போட்டியை நடத்தும் எண்ணம் ஏற்பட்டது. மேலும் ஏழை எளிய ஓவியத்தில் ஆர்வம் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்காக துவங்கப்பட்டுள்ள இந்த இலவச ஓவியப் பயிற்சி பள்ளிக்கான கட்டுமான பணி தென்குடியில் நடைபெற்று வருகிறது. இதன் திறப்பு விழா அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி ஓவியர் ராஜா ரவி வர்மாவின் நினைவு நாளன்று நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் சுகுணா சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஓவியத்தை அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பாடமாக வைத்திருக்கின்றனர். ஏனென்றால் ஓவியப் பயிற்சி பெறும் மாணவர்களின் மூளை திறன் சிறப்பாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.எனவே மாணவ மாணவிகள் ஓவியம் போன்ற கல்வி அல்லாத இதர திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்வில் நன்னிலம் லயன்ஸ் சங்க தலைவர் ராஜ் சமூக ஆர்வலர் செல் சரவணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆரார் ரவி நாகராஜன் உடற்கல்வி ஆசிரியர் வினோத் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். மேலும் லலிதாம்பிகை மெட்ரிக் பள்ளி  ஆசிரியர்கள் மற்றும் பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன். tamil news live tv,latest news in tamilnadu tamil,tamil news channel,tamil news flash,tamil news daily,Indraya nalla neram,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,Painter Raja Ravi Verma Birthday Painting Competition

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended