Author: மேலப்பாளையம் ஹஸன்

Category: குற்றம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள "வைராவிகிணறு" பகுதியை சேர்ந்தவர் பச்சைமால். இவருடைய மகன் மாடசாமி (வயது. 38).தனக்கு சொந்தமான 407 டெம்போ வேனை, மாடசாமி தன்னுடைய நண்பரான கல்யாணி என்பவர் வீட்டின் அருகில், நிறுத்தி வைத்திருந்தார்.

திடீரென அந்த வேன் இன்று (மே.14) அதிகாலை 2 மணிக்கு மேல், மர்ம நபரால் திருடப்பட்டு, கோயம்புத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காலையில் எழுந்த, வாகனத்தின் உரிமையாளர் மாடசாமி, வேனை காணவில்லை என்றதும், கூடங்குளம் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.

உடனடியாக, கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் விணுகுமார், தனி படையுடன் களமிறங்கி, விசாரணை செய்தார். விசாரணையின் முடிவில் டெம்போ வேன், கோயம்புத்தூருக்கு கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

நாங்குஞேரி சுங்கச் சாவடியில், இது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக கோயமுத்தூர் விரைந்த கூடங்குளம் போலீசார், அந்த டெம்போ வேனை பறிமுதல் செய்து, திருநெல்வேலிக்கு கொண்டு வந்தனர்.

டெம்போ வேனை திருடி, கோயம்த்தூருக்கு கொண்டு சென்ற, நெல்லை மாவட்டம் "வைராவிகிணறு" கிராமத்தை சேர்ந்த, சின்னத்துரை என்பவரின் மகன், அஜீத் குமார் (வயது. 25) என்பவர், உடனடியாக கைது செய்யப்பட்டு, முறையான நடவடிக்கைகளுக்கு பின்னர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அஜீத்குமார் மீது, களவு, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள், நிலுவையில் உள்ளன! என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:

#tirunelvelinews #theft #thief #thirudan #tirunelvelinews , #tirunelvelinewstamil , #tirunelvelinewspaper , #tirunelvelinewschannel , #tirunelvelinewsyesterday , #tirunelvelinewslive , #tirunelvelimavattamnews , #இன்றையசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையமுக்கியசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltirunelvelitamilnadu , #indrayaseithigaltirunelveli , #todaynewstirunelveli , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #tirunelvelitodaynews , #tirunelvelilatestnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews
Comments & Conversations - 0