ஓட்டப்பிடாரம் காவல்துறையின் சித்ரவதை.

மாரிமுத்து

UPDATED: May 27, 2023, 9:03:31 AM

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பரும்பூர் பகுதியை சார்ந்தவர் கூலி தொழிலாளியான முருகன் மகன் முருகன். இவர் பழங்குடி வகுப்பை சார்ந்தவர். முருகன் நேற்று முந்நாள் 25.5.2023 பரும்பூர் பகுதியில் நடந்த கோயில் கொடைவிழா நிகழ்ச்சியினை காண சென்றுள்ளார்.

அங்கு சென்று நிகழ்ச்சியில் விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியினை சார்ந்த 10க்கும் மேற்பட்டோர் முருகனை பிடித்து கழுத்தை இறுக்கி அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் ஊர்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து தப்பித்து ஓடியுள்ளார். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் , தனிப்பிரிவு காவலர் மற்றும் காவலர்கள் 5 பேர் முருகனின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர்.

அதன் பின் முருகனுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

இதனை அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் இவர் மீது பொய் வழக்குபதிவு செய்து சிகிச்சையில் இருக்கும் முருகனை கைவிலங்கிட்டும், நீண்ட தொடர் சங்கிலியால் (leading Chain) கட்டியும் சித்ரவதை செய்துள்ளனர்.

மேலும் நள்ளிரவு 12 மணிக்கு 4 காவலர்கள் சிகிச்சை பெற்று வரும் முருகனிடம் மிரட்டி வெற்று தாளில் கையொப்பம் வாங்கி சென்றுள்ளனர்.

மேற்படி காவல்துறையினரின் செயலானது மனித உரிமை மீறிய செயலாகும்.

ஆகவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் முத்துராஜ், காவலர் கோபிநாத் மற்றும் உடந்தையாக இருந்த காவலர்கள் மீது தீர விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIDEOS

RELATED NEWS

Recommended