• முகப்பு
  • புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது ?

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி : பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன். பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது நடுத்தர ஏழை எளிய மக்களை பாதுகாக்க கூடிய அரசாக மத்தியில் ஆளும் பாஜக அரசு உள்ளது என்றார். மேலும் ஜன்தன் வங்கி கணக்கு மூலம் புதுச்சேரியில் 100 சதவீதம் பேர் வங்கி கணக்கு வைத்துள்ளதாக தெரிவித்த சாமிநாதன் வங்கிகள் மூலம் பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாமை புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக பாஜக நடத்தி வருவதாக தெரிவித்தார். வருகின்ற 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருவதாகவும் அவர், புதுவையில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சாமிநாதன்.... ஜிப்மர் மருத்துவமனையில் புதுவை மக்கள் மற்றும் வெளி மாநில மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, சிகிச்சை அளிப்பதில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு முழுவதும் தவறானது என்று தெரிவித்த அவர், தற்போது ஜிப்மர் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படுகிறது இதன்மூலம் கூடுதலாக ஏழை எளிய மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறினார். புதுச்சேரியில் ஏழை எளிய என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படக்கூடிய பாரத் ஆயுஷ்மான் திட்டத்தை முடக்கியது நாராயணசாமி தலைமையிலான அரசு தான் என்று குற்றம் சாட்டிய சாமிநாதன் தற்போது பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசில் விடுபட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக பகிரங்கமாக விமர்சனம் செய்த சாமிநாதன், காங்கிரஸில் 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள நாராயணசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஆளுநரை வைத்து புதுச்சேரியில் பாஜகவை வளர்க்கவில்லை என்ற சாமிநாதன் பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரியில் வளர்ந்த கட்சி தான் என்றார். துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாமிநாதன், ஆளுநர் யார் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும், மத்திய அரசின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் ஆதரிப்போம் என்றார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல். இன்றைய செய்திகள் பாண்டிச்சேரி ,இன்றைய முக்கிய செய்திகள் பாண்டிச்சேரி,இன்றைய செய்திகள் பாண்டிச்சேரி,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,Pondichery news,

VIDEOS

RELATED NEWS

Recommended