எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள்!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 14, 2023, 11:43:31 AM

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிக்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான

எடப்பாடி கே. பழனிச்சாமியின், 69-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் "தச்சை" என். கணேச ராஜா அவர்களின் தலைமையில், தச்சநல்லூர் மேற்கு பகுதி மாவட்ட பிரதிநிதி ஆர்.ஆர்.பால்ராஜ் ஏற்பாட்டில்,

நெல்லை டவுண் உழவர் சந்தை அருகில் உள்ள "ராமசுவாமி நினைவு அரசு மருத்துவமனை"யில் உள்ள, மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதியோர்களுக்கு, இன்று(மே.13) ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க நிர்வாகிகள் மற்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended