Author: THE GREAT INDIA NEWS

Category: district

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சியார் பேட்டை கிராமத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் ஊராட்சி மன்ற தலைவராக சந்தானம் சக்திகள் வெற்றி பெற்றார் தொடர்ந்து வார்டு உறுப்பினர்களாக கணேசன் ராஜேந்திரன் உட்பட 6 பேர் வெற்றிபெற்ற நிலையில் துணைத் தலைவர் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்பொழுது கணேசன் மற்றும் ராஜேந்திரன் இருவரும் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர் அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தனர் இந்த நிலையில் இரண்டு நபர்களுக்கும் தலா 3 வார்டு உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில் கணேசனுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் சக்திவேல் ஆதரவளித்தார் . அப்போது இரு தரப்பினரிடையே தகராறு மோதல் வாக்குவாதம் என அடுத்தடுத்து ஏற்பட்டதால் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மறுமுறை தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் அதில் ராஜேந்திரன் உள்ளிட்ட 3 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை கணேசன் உள்ளிட்ட 3 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் சக்திவேல் கலந்து கொண்ட நிலையில் துணைத் தலைவர் தேர்தலுக்கு போதிய பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்து விட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் புறப்பட்டுச் சென்றார். இதனால் தேர்தல் நடைபெறவில்லை தொடர்ந்து அடுத்தடுத்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டுமென அரசு அறிவித்த நிலையில் ஒருமுறைகூட கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை இந்தநிலையில் கடந்த ஒன்றாம் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில் அன்றைய தினம் திருநாவலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் கிராம சபை கூட்டத்தை நடத்தாமல் தன்னிச்சையாக சுழற்சிமுறை என்று கூறி மற்றொரு பகுதியில் கூட்டத்தை நடத்தினார் . அதில் ஊராட்சிமன்ற தலைவர் சந்தானம் சக்திவேல் மற்றும் 3 வார்டு உறுப்பினர்கள் தகவல் தெரியாததால் கலந்துகொள்ளவில்லை. பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் இவர்கள் மதியம் 2 மணி வரை காத்திருந்த நிலையில் கூட்டம் நடக்காததால் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர் . இந்த நிலையில் நடக்காத கூட்டத்தை நடந்ததாக அரசு அதிகாரிகள் பதிவேடுகளை தவறான முறையில் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் முறையாக கிராம சபை கூட்டம் நடக்காதது தெரியவந்ததையடுத்து , மே மாதம் 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தில் மட்டும் நடக்கவில்லை என்றும் அதனால் இன்று 17ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்தி அதில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடந்த 2019 - 2020 ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை தணிக்கையாளர் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார் . அதன்படி இன்று காலை நாச்சியார் பேட்டை கிராமத்தில் உள்ள பொது இடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது அதில் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கலந்து கொண்ட நிலையில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ளவில்லை . நாச்சியார் பேட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட கலந்து கொள்ளவில்லை இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் சக்திவேல் மற்றும் வார்டு உறுப்பினர் கணேசன் அவரது ஆதரவாளர்கள் இருவர் என மூன்று வார்டு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் முன்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும் திட்டமிட்டு நாச்சியார் பேட்டை மேடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இன்று நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்யுமாறு கூறியதால் அவர்கள் பணிக்கு சென்றிருந்தனர். ஆனால் நாற்பத்தி எட்டு பேர் மட்டுமே பணி செய்த நிலையில் 118 பேர் பணி செய்ததாக பதிவேட்டில் பதிந்துள்ளனர் , இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் அதிகாரிகளிடம் சராமரியாக கேள்வி எழுப்பினர் , அதற்கு சரியான பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர், இதனிடையே பொதுமக்கள் முன்னிலையில் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.

Tags:

#இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #kallakurichinewstodaytamil #kallakurichiflashnewstamil #gramasabhaikootam #gramasabha
Comments & Conversations - 0