ஆன்லைன் ரம்மி தற்கொலை ....

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது . ஆன்லைன்ரம்மி விளையாட்டில் நகை , பணத்தை இழந்த மணலி புதுநகரை சேர்ந்த பவானி என்ற பெண் உள்பட பல பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சூதாட்டம் வாழ்வை சிதைக்கக் கூடியது என்பதற்கு சமீபத்திய உதாரணங்களாக இவைகள் இருக்கின்றன. முதலில் பணத்தை பார்ப்பவர்கள் மெல்ல மெல்ல பணத்தை இழக்கிறார்கள். விட்ட பணத்தை எடுத்துவிடலாம் என கடன் வாங்குகிறார்கள். சிறு துளி பெரு வெள்ளமாய் மாறுவது போல கடன் பெருகி கடைசியில் தற்கொலையில் கொண்டு விடுகிறது இந்த சூதாட்டம். வேலை வாய்ப்பு இல்லாததாலும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் இன்றைய இளைஞர்களும், பெண்களும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். எனவே இன்றைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது தமிழக அரசின் கடமை. மேலும் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை இன்றைய இளைஞர்களும், பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும். பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இதற்கிடையே மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended