• முகப்பு
  • திருவாரூரில் ஒரு கோடியே 97 லட்சத்து 56 ஆயிரத்து 290 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்து

திருவாரூரில் ஒரு கோடியே 97 லட்சத்து 56 ஆயிரத்து 290 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்து

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட விளமல் ஊராட்சியில் நடைபெற்ற அரசு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1072 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகிக்க, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில்  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழக மக்களின் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கான அரசாக தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்ந்து வருகிறது. இன்றையதினம் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 55 நபர்களுக்கு ரூ.11 லட்சத்து 87 ஆயிரத்து 662 மதிப்பிலான பேட்டரியால் நகரும் நாற்காலி,கல்வி உதவிதொகை,வங்கி கடன் மானியம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகைக்கான ஆணைகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 17 நபர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்து 96 ஆயிரத்து 500 மதிப்பிலான கான்கீரிட் குடியிருப்பு வீடுகளும்,தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் காசோலைகளும், வேளாண்மைத்துறை சார்பில் 3 நபர்களுக்கு மரக்கன்றுகளும், வேளாண்மைப் பொறியியல்துறை சார்பில் 3 நபர்களுக்கு சூரிய மின் சக்தி மோட்டர் நிறுவ அரசு மான்யமாக ரூ.6 லட்சத்து 10 ஆயிரத்து 197 மதிப்பிலான காசோலைகளும்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 7 நபர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 931 மதிப்பிலான தையல் இயந்திரம் மற்றும் சலவை இயந்திரமும்,வருவாய்த்துறை சார்பில் 143 நபர்களுக்கு ரூ.30 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனைப்பட்டாவும்,சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 838 நபர்களுக்கு ரூ.1 கோடியே 32 ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும் ஆக மொத்தம் 1072 நபர்களுக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அவர்களை பொறுத்தவரையில் ஆட்சியில் அமர்ந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்திலேயே 505 தேர்தல் வாக்குறுதிகளில் சுமார் 202 தேர்தல் வாக்குறுதிகளுக்கு மேல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி உள்ளார்கள். திருவாரூர் விவசாயம் சார்ந்த மாவட்டம்,அதில் நெல் விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள்.ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே 12 ஆண்டுகளுக்கு பின்பாக நெல்லின் ஆதார விலையை குறுவைக்கு ரூ.1960 என்பதை ரூ.2060 ஆக  தமிழக முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி வழங்கி இருக்கிறார்கள். அதேபோல் பொது ரகத்திற்கு ஆதார விலையை ரூ.1940 என்பதை ரூ.2015 ஆக உயர்த்தி வழங்க உள்ளார்கள்.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் 3 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய விவசாயிக்கு பணம் உடனடியாக செல்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் அவர்கள் கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவை ஆலைக்கு அனுப்ப வேண்டும். பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் சேமித்து  வைக்க  வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள்.நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் அவர்கள் உணவு மானிய கோரிக்கையில் தமிழகத்தில் 5 இடங்களில் ஒரு ஆலைக்கு 500 மெ.டன் நெல் அரைக்கின்ற வகையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் புதிய அரிசி ஆலைகள் அமைக்க இருக்கிறோம் என்பதை அறிவித்துள்ளார்கள். அதேபோல் ரூ.100 கோடி செலவில் 800 மெ.டன் நெல்  அரைக்கின்ற வகையில் மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அரிசி ஆலை நிறுவ இருக்கிறோம். நுகர்வோர் வாணிப கழகத்தின் மூலமாக 21 மாடர்ன் ரைஸ் மில் இயங்கி வருகிறது.அதில் தரமான அரிசி அரைக்கின்ற வகையில் கலர் சாட்டர் பொறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் தனியார் நிறுவன அரிசி ஆலைகளுக்கும் கலர் சாட்டர் பொறுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அ

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended