Author: THE GREAT INDIA NEWS

Category:

காஞ்சிபுரம் : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண்காவலர் உமாதேவி (வயது 24) என்பவர் தன்னுடைய கணவர் ராஜா, மற்றும் கைக்குழந்தை தர்ஷன் (ஒன்றரை வயது) ஆகியோருடன் வசித்து வருகிறார். உமாதேவி கடந்த 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்புடன் பணியாற்றும் உமாதேவி தற்போது காஞ்சிபுரம் நகரில் உள்ள சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகின்றார். தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் குடும்பத்தினருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாட காஞ்சிபுரத்தில் இருந்து தன் கணவர் ராஜா மற்றும் கைக்குழந்தை தர்ஷன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்புட்குழி அருகே சென்றுகொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து வேலூர் மார்க்கமாக சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த 2 சொகுசு கார்கள் மீது மோதிவிட்டு முன்னாள் சென்று கொண்டிருந்த பைக் மீதும் மோதியது. அந்த விபத்தில் உமாதேவி மற்றம் அவருடைய குழந்தை என இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜா தலைக்கவசம் அணிந்து இருந்த படியால் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னையை சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுனர் மணிகண்டன் விபத்து ஏற்பட்டவுடன் லாரியை விட்டு குதித்து தலைமறைவானார். இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து உமாதேவி மற்றும் தர்ஷன் ஆகியோரின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த போக்குவரத்தை சீர் செய்தனர். தன் குழந்தையுடன் இளம் பெண் காவலர் வாகன விபத்தில் சிக்கி, உயிரிழந்த செய்தியைக் கேட்டவுடன், சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், ஏடிஜிபி ஜெயராமன், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் சிவகாஞ்சி காவல் நிலைய திறப்பு விழாவில் உமாதேவி கலந்துகொண்டு அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். பேட்டி. ஜான்சிராணி. உமாதேவியின் சகோதரி. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். #kanchipuram #accident #police #pudukottai #highway

Tags:

Comments & Conversations - 0