Author: THE GREAT INDIA NEWS

Category:

சர்வதேச அளவில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களுக்கு, சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின் மெச்சதக்க பணிகளை அங்கீகரிக்கும் விதமாக 29 பேருக்கு நாரி சக்தி விருதுகள் இன்று வழங்கப்பட்டன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து, தோடா கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா ஆகியோர் கூட்டாக 2020ம் ஆண்டுக்கான நாரிசக்தி விருதினை பெற்றனர். இதேபோல் சென்னையை சேர்ந்த மனநல மருத்துவரும் ஆய்வாளருமான தாரா ரங்கசாமிக்கு 2021ம் ஆண்டுக்கான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, முரளிதரன் உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து, ஊட்டியில் மகளிருக்கென சுய உதவி குழு அமைத்து எம்ராய்டிங் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், விருது பெற்ற பிறகு மகளிருக்கென அதிக அளவில் உழைக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல், விருது பெற்ற மருத்துவர் தாரா ரங்கசாமி பேசுகையில், என்.ஜி.ஓ. ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் மன நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

Tags:

Comments & Conversations - 0