• முகப்பு
  • விவசாயம்
  • 12ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சிப்காட்டுக்கு எதிராக விவசாயிகள் 3 நாமம் போட்டுக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அறிவிப்பு.

12ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சிப்காட்டுக்கு எதிராக விவசாயிகள் 3 நாமம் போட்டுக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அறிவிப்பு.

முத்தையா

UPDATED: May 30, 2023, 7:11:43 PM

நாமக்கல் மாவட்டம் மோகனூர் , வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதற்கான பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதற்கு இடையில் நேற்று புதியதாக பதவி ஏற்றுள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் உமா விவசாயிகளின் கருத்து கேட்டு கூட்டத்தை நடத்தி பல்வேறு கருத்துக்களை கேட்டுள்ளார்

இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாமக்கல் ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ். உமா தலைமையில் தலநடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் கே.பாலசுப்பரமணியன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட விவசாய அணி தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 30.5.2023,   

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் உம்மாவிடம் இதுகுறித்து மீண்டும் விலக்கி கூறிய பின்பு இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளதாக கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் கே .பாலசுப்பிரமணியம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விவசாய அணி தலைவர் ரவி ஆகியோர் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதி வளையப்பட்டியில் சிப்காட் அமைப்பதை ரத்து செய்து அரசியல் அதில் அறிவிப்பு வெளிவரும் வரை தங்களின் போராட்டம் நீடிக்கும் என்றும் வருகின்ற 5 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிப்காட் தலைமை அலுவலகத்திற்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தமிழக முதல்வரும் ஜப்பான் சென்று உள்ளதாகவும் அவர்கள் வந்த பின் இது சம்பந்தமாக உரிய முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் அதற்கு பதில் அளித்து இருக்கிறார்கள்.

அதற்காகவும் காத்திருப்பதாகவும் இதன் இடையில் உரிய தீர்வு எட்ட படவில்லை என்றால் வரும் 12 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன் சிப்காட் வேண்டாம் என்றும் சிப்காட் அறிவிப்பை ரத்து செய்து அரசிதழில் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 3 நாமம் போட்டு கொண்டு பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended