• முகப்பு
  • அரசியல்
  • கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் 30ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் 30ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

ரமேஷ்

UPDATED: May 6, 2023, 10:11:13 AM

கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தந்தை பெரியாரின் தன்மான உணர்வையும், பேரறிஞர் அண்ணாவின் தமிழின உணர்வையும் கொண்டவர்களாக 1994ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா காஞ்சியில் தொடங்கிய மறுமலர்ச்சி மன்றத்தை நினைவூட்டும் வகையில் பெயர்சூட்டி 29ஆண்டுகளை கடந்து மதிமுக பீடு நடைபோடுகிறது.

மதிமுக இன்னும் எண்ணற்ற வெற்றிகள் பெற்று, வருகின்ற சோதனைகளை முறியடித்து, கழகம் வெற்றிக்குண்டத்தின் உயரத்தில் புகழ்க்கொடி உயர்த்தும். இந்த 30ஆம் ஆண்டு இயக்கத்திற்கு ஒளிதரும் ஆண்டாக,

புதுவாழ்வு தரும் ஆண்டாக, உண்மையான மறுமலர்ச்சிக்கு தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையோடு கட்சியின் 30ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மகாமக குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாநில துணைச் பொதுச்செயலாளர் முருகன், தலைமையில் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.

நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended