• முகப்பு
  • திருவாரூரில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் ஆட்சியர் அலுவலக முற்ற

திருவாரூரில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் ஆட்சியர் அலுவலக முற்ற

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசலின் வாட் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் மாவட்ட பா. ஜ.க பட்டியலணி மற்றும் வர்த்தக பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட  பாஜக சார்பில் பா.ஜ.கவின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அணியினர் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்ட பாஜக பட்டியலில் மற்றும் வர்த்தக பிரிவு சார்பில் தமிழக அரசு வாட் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தியும்,பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப் போராட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன்,மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் டீசல் வரியை குறைத்து அதன் வாயிலாக அதன் விலையும் குறைந்தது. ஆனால் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்துவிட்டு 3 ரூபாய் மட்டும் குறைத்தது. எனவே பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உடனடியாக குறைத்து, மற்ற மாநிலங்களைப் போல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்த முற்றுகைப் போராட்டத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கோட்டூர் ராகவன்,ஆதிதிராவிட நலப் பிரிவு பக்கிரிசாமி,வர்த்தக அணித் தலைவர் பில்லூர் முருகன்,மாவட்ட பொது செயலாளர் செந்தில் அரசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு,ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் ரவி,நகர தலைவர் சங்கர்,நகர பொதுச் செயலாளர் கணேசன்,நகர செயலாளர் வசந்த ராஜன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended