• முகப்பு
  • சென்னை
  • திமுக அரசு லாபாம் பார்க்காமல் சத்துணவு பணியாளர்களுகே காலை சிற்றுண்டி பணியை வழங்க சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திமுக அரசு லாபாம் பார்க்காமல் சத்துணவு பணியாளர்களுகே காலை சிற்றுண்டி பணியை வழங்க சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

பிரவீன்

UPDATED: May 23, 2023, 6:47:44 AM

சென்னை ராஜரத்தினம் மைதானம் வெளியே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதுலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் சத்துணவு ஊழியர்கள் 2அமச கோரிக்கையை அரசிற்க்கு முன்வைத்துள்ளனர்.

அதில் தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் பணியை மகளிர் சுய உதவி குழுக்களிடம் வழங்காமல், சத்துணவு ஊழியர்களுக்கே அந்த பணியை வழங்க வேண்டும்,

தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டுமென்று கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் ஆர்பாட்டம் தொடர் போராட்டமாக மாறுமென்று அரசிற்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், அப்போது பேசிய சத்துணவு ஊழியர்கள் சத்துணவு பணியாளர்களை காலை உணவு சமைக்க நியமணம் செய்யாமல் விட்டதே காலை உணவு திட்டத்தில் திமுகவினருக்கு பணி வழங்கதான் என்றும்,

பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் தான் காலை மற்றும் மதிய சத்துணவு சமைக்க வேண்டும் இரண்டிற்க்கும் ஒரே இடம் எப்படி சரியாக இருக்கும், பொருட்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும்,

காலையில் சாப்பிட்ட சிற்றுண்டியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சத்துணவு ஊழியர்களிடம் தான் மாணவர்களின் பெற்றோர் வந்து கேட்பார்கள் யார் செய்த உணவு சரியில்லை என கண்டறிய முடியாது ஆகவே இரண்டு உணவையும் சத்துணவு ஊழியர்களே சமைக்க திமுக அரசு ஆணை பிறபிக்க வேண்டுமென்றும்,

சத்துணவிற்க்கு ஒரு மாணவருக்கு 2ரூபாய் 42 பைசா தான் வழங்குகின்றது அரசு ஆனால் காலை உணவிற்க்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 8ரூபாய் 25 பைசா வழங்குகின்றனர்,

இது என்ன அநியாயம் என்று கேள்வி எழுப்பிய சத்துணவு ஊழியர்கள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தங்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக மாற்றுவோம் என கூறி ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டு தங்களின் வயிற்றில் தற்போது அடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்..

VIDEOS

RELATED NEWS

Recommended