வாட்ஸ் அப்பில் புதிய அம்சங்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வாட்ஸ்ஆப் கொண்டுவரும் சூப்பர்அப்டேட்..! அது என்ன என்றால்..... Companion Mode எனப்படும் புதியவசதி தான். இந்த புதியவசதியின் மூலம், நீங்கள் புதியமொபைல் அல்லது டேப்லட்டில் வாட்ஸ்ஆப்பில் நுழையும் போது, பழையசாட் ஹிஸ்டரிக்களை புதியசாதனத்தில் நகலெடுக்கமுடியும். இதனால் உங்களதுநண்பர்கள் அனுப்பிய தகவல்கள் இரண்டு சாதனங்களில் பாதுகாக்கப் படும். பயனர்கள் ஒரேநேரத்தில் இரண்டுபோன்களில் இருந்து தங்கள் வாட்ஸ் அப் கணக்குகளில் உள் நுழைய (Log in) அனுமதிக்கிறது. தற்போதுள்ள வாட்ஸ்ஆப் வெர்சன் உங்களுக்கு அந்தவசதியை அனுமதிப்பதில்லை. உங்களது அரட்டை வரலாறுகளை ( Chat History ) நீங்கள் லாக்இன் செய்து உள்ள அனைத்து சாதங்களிலும் ஒத்திசைக்கப் படும். (synchronize). அசல் தொலை பேசியிலிருந்து மற்ற சாதனங்களுக்கு சாட்ஹிஸ்டரியை மாற்றும் செயல் முறையை இந்த அம்சம் எளிதாக்குகிறது. இந்த Companion Mode தற்போது, சோதனைக்கட்டத்தில் இருப்பதால், எப்போதுவெளியாகும் என்ற தகவலை வாட்ஸ்ஆப் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதே போல் பல்வேறு சிறப்பு அம்சங்கள் சோதனைகட்டத்தில் இருப்பதால், அடுத்தடுத்த அப்டேட்டுகளில் அந்தவசதிகள் பயனர்களுக்கு வழங்கப் படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வாட்ஸ்ஆப் தனது பயனர்களுக்கு ஆன்லைனில் இருப்பதை அனைவரிடமும் இருந்துமறைக்கும் வசதியை வழங்கியது குறிப்பிடத் தக்கது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended