Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

நாட்டில் 75 வது சுதந்திர தின விழா ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி புதுச்சேரி பல்வேறு அரசு நிறுவனங்களில் சுகந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் பள்ளியில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இதில் சிறப்பாக கலந்து கொண்டு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடமடைந்த குழந்தைகள் வரவேற்பு அளித்தனர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார். தொடர்ந்து துரித உணவுகளை உண்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றி பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இதனையும் ரசித்துப் பார்த்தார் இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்க துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்.... கடந்த கால ஆட்சி நிர்வாகம் முடங்கி போயிருந்ததால் காரைக்காலில் என்ன நடந்தது என்று தெரியவில்லை இருப்பினும் 50 கோடி ரூபாய் செலவில் காரைக்கால் முழுவதும் புதிய குடிநீர் குழாய் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் மதிய உணவில் முட்டை மற்றும் வாழைப்பழம் சேர்ப்பதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது நீட் தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர் கடந்த கால ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை. ஆனால் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டே தான் இருப்பார்கள் என்று விமர்சனம் செய்த அவர் புதுச்சேரியில் வளர்ச்சி பணிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. மீனவர்கள் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி அதற்கான தீர்வு காணப்படும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். பேட்டி; தமிழிசை சௌந்தரராஜன், துணைநிலை ஆளுநர் புதுச்சேரி. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#pondicherynewstoday #pondicherynewstamil #pondicherynewspapertoday #tamilisai #tamilisaisoundararajan #bjp #pondicherynewslivetoday #pondicherynews #இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigalpondichery #todaynewspondichery #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalpondicherytamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0