• முகப்பு
  • கல்வி
  • 1 கோடி ரூபாய் மதிப்பில், பாளையங்கோட்டை பிராந்தன் குளம் நடுநிலைப்பள்ளியில், புதிய வகுப்பறைகள் கட்டப்படும்!

1 கோடி ரூபாய் மதிப்பில், பாளையங்கோட்டை பிராந்தன் குளம் நடுநிலைப்பள்ளியில், புதிய வகுப்பறைகள் கட்டப்படும்!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 15, 2023, 7:36:22 PM

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலம், 7- வது வார்டுப்பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளி, இதுநாள் வரையிலும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பள்ளியில், வகுப்பறைகள் உள்ளிட்ட, அனைத்துக் கட்டிடங்களும் அதிக அளவில் சிதிலம் அடைந்து, பயன்படுத்துவதற்கு லாயக்கற்றதாக இருந்து வருகிறது.

எனவே, மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் நலன்களையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் கருதி, இந்த பள்ளியானது, இந்த ஆண்டு 2023) மார்ச் மாதம், நெல்லை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, சட்டப்படி மாற்றப்பட்டது.

இப்பள்ளியில், 1-ஆம் வகுப்பு முதல், 8-ஆம் வகுப்பு வரை, சுமார் 175 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் அனைத்துக் கட்டிடங்களும் இடிக்கப்பட்டு, புதிதாக 400 சதுர அடியில், தலைமை ஆசிரியர் அறை, வகுப்பறை, சமையல் அறை என, கீழ்தளம், மேல்தளம் கொண்ட 6 வகுப்பறைகள், கழிப்பறைகள், மின்சாரம், பாதுகாக்கப்பட்ட R.O WATER ஆகியன, மொத்தம் 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டபட உள்ளன.

அதற்கு வசதியாக, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராமசாமி, இளநிலை பொறியாளர் ஜெயகணபதி ஆகியோர் முன்னிலையில், இன்று (மே.15) ஜேசிபி எந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது. 

புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக ஆன்லைன் டெண்டர் முடிவுகள், அடுத்த மாதம் (ஜூன்) 5-ஆம் தேதி வெளியாகிறது. அதன் பின்பு கட்டுமான பணிகள் துவக்கப்படும்.

கட்டுமான பணிகள் நடைபெறும் காலங்களில், இப்பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி வளாகத்தின் அருகில், மாற்று இடவசதி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!- இவ்வாறு, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் வ.சிவ கிருஷ்ண மூர்த்தி, தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended