நீட் தேர்வு தற்கொலை, தொடரும் அவலம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரியலூர் நகரில் இரயில்நிலையம் அருகே வசிக்கும் நடராஜன் - உமா தம்பதியினரின் மகள் மாணவி நிஷாந்தினி தற்கொலை. இவர் கடந்த ஆண்டு நடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் நீட் தேர்வுக்கு கடினமாக இருப்பதாகவும், தமது தந்தை இனி வெளிநாட்டில் கஷ்டப்படாமல் ஊரிலேயே வந்து தங்கி இருக்க வேண்டுமென்றும் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுக திமுக என ஆளாளுக்கு நாங்க நீட் தேர்வை ரத்து செய்வோம், எங்க ஆட்சியிலே நீட் இருக்காது என பொய் வாக்குறுதி தந்து மாணவ மாணவிகளை குழப்ப நிலைக்கு தள்ளி அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி கொண்டார்கள். நீட் தேர்வுக்கு அரசு பள்ளிகளில் முறையான பயிற்சி கொடுத்தால் மட்டுமே இந்த சோகங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும். இனி ஒரு உயிர் போகாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended