இயற்கை சிமென்ட்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வீணாகும் பழங்கள், காய்கறிகளை வைத்து, சிமென்ட் தயாரிப்பதில் ஜப்பானிய விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதற்கு, மரத்துாளை வெப்ப அழுத்தத்தின் மூலம் கட்டுமானப் பொருட்களாக ஆக்கும் அதே தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூசணித் தோல், ஆரஞ்சுத் தோல், வாழைப் பழத் தோல், வெங்காயச் சருகு, கடற் பாசி என்று வீணாகும் உணவுப் பொருட்களை உலர்த்தி, பொடியாக்கினர்.ஒட்டும் தன்மைக்காக, வீணாகும் உணவுப் பொருட்களை சேர்த்தனர். இந்தப் கலவைக்கு, வெப்ப அழுத்தம் கொடுத்தபோது, 'சிமென்ட்' போன்ற பொருள் கிடைத்தது. இந்த இயற்கை சிமென்ட் சந்தைக்கு வந்தால், சுற்றுச்சூழலுக்கு நல்லது.

VIDEOS

RELATED NEWS

Recommended