• முகப்பு
  • district
  • விவசாயத் தொழிலாளர்களின் தட்டுப்பாட்டைகளை களையும் பொருட்டு முதன்முறையாக ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு

விவசாயத் தொழிலாளர்களின் தட்டுப்பாட்டைகளை களையும் பொருட்டு முதன்முறையாக ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உலகிலேயே முதல் நானோ யூரியாவை இந்திய உழவர் உரக் கூட்டு நிறுவனமான இப்கோ, இந்திய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முதலாக தாங்கி என்ற கிராமத்தில் சந்திரசேகரன் என்பவரது தோட்டத்தில் 25 நாட்களேயான நெற்பயிரில் டிரோன் மூலம் இப்கோ நானோ யூரியா மற்றும் கடற்பாசி திரவ உரம் தெளிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு நானோ யூரியா உரம் தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 240 என்பதாலும் சாதாரண குருணை யூரியாவை விட 10 சதவீதம் விலை குறைவு என்பதாலும், ஒரு மூட்டை யூரியா தேவைபடுகிற இடத்தில் அரை விட்டர் நானோ யூரியா பயன்படுத்தினால் போதும் என்பதாலும் விவசாயிகளின் பார்வை நானோ யூரியா மீது திரும்பி உள்ளது என இப்கோ மேலாளர் தெரிவித்தார். மேலும் கூறுகையில், அடி உரமாக இட வேண்டிய டிஏபி காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களை எப்பொழுதும் போல் பயிர்களுக்கு தெளித்துவிட்டு 25-வது மற்றும் 50-ஆவது நாளில் நெற்பயிரின் மேலுரமாக இடக்கூடிய யூரியாவிற்கு மாற்றாக இந்த நானோ யூரியா திரவத்தை பயன்படுத்தும் போது விவசாயிகள் யூரியாவை மேலுரமாக இட வேண்டிய அவசியமில்லை எனவும், நானோ யூரியாவில் 4 சதவீத தழைச்சத்து அல்லது 40000 PPM என்ற அளவில் தழைச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதால் நானோ யூரியாவை இலைவழி தெளிப்பாக விவசாயிகள் பயன்படுத்தும் போது இதற்கான முழு பயனையும் அடைய முடியும். மேலும் இலையில் உள்ள துவாரங்களின் மூலம் நானோ யூரியா உறிஞ்சப்பட்டு பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்தை 20 முதல் 25 நாட்களுக்குள் பெற்று பயிர்கள் பசுமையாக வளர்கின்றது எனத் தெரிவித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நானோ யூரியா தங்குங்கு தடையின்றி கிடைக்க வேளாண்மை துறை அனைத்து ஏற்பாடு செய்து உள்ளதாகவும், விரைவில் வேளாண்மை அலுவலகத்தின் மூலம் மானிய விலையில் ட்ரோன்கள் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது எனவும் வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோ தெரிவித்தார். இந்த செயல் விளக்க கூட்டத்தில் இப்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் யு.எஸ்.அவஸ்தி, விற்பனை இயக்குனர் யோகேந்திர குமார், முதுநிலை பொது மேலாளர் டாக்டர் எம் ஜே எம் ரெட்டி , மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended