• முகப்பு
  • குற்றம்
  • ஜேடர்பாளையத்தில் கரும்பு ஆலை கொட்டகையில் வட மாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் தீ வைப்பு.

ஜேடர்பாளையத்தில் கரும்பு ஆலை கொட்டகையில் வட மாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் தீ வைப்பு.

முத்தையா

UPDATED: May 14, 2023, 6:23:04 PM

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் வடகரை ஆத்தூர் சரளைமேடு ராஜீவ் காந்தி காலனி அருகில் உள்ள முத்துசாமி என்பவருடைய கரும்பு ஆலை கொட்டகையில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த ஆஸ்பட்டாஸ் அட்டை குட்டகையில்  

14.05.2023 ஞாயிறு நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மர்ம நபர்கள் கொட்டகையில் பின்புறத்தில் அட்டை உடைக்கப்பட்டு துணியை மண்ணெண்ணையில் நனைத்து தீ வைத்து கொட்டகைக்குள் உள்ளே வீசி உள்ளனர்.

உள்ளே கொட்டகையில் உறங்கி கொண்டிருந்த 4 வட மாநில நபர்கள் மீது தீப்பிடித்தது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராக்கி வயது 24 என்பவருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் மற்றும் எஸ்வந்த் ஆகிய மூன்று நபர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டு மூன்று நபர்களையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் ராக்கி என்பவருக்கு பலத்த 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது மோப்பநாய் பிரிவுகள் வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்களைக் கொண்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது.

நடமாடும் தடவியல் வாகனம் வரவழைக்கப்பட்ட தடவியல் நிபுணர்கள் தீ வைத்த இடங்களில் உடைந்த ஆஸ்பட்டாஸ் ஓடுகள் தீயை பற்ற வைத்து தூக்கி எறிந்த துணிகள் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மண்டல டிஐஜி விஜயகுமார் கரும்பு சக்கரை ஆலை கொட்டகையில் தீப்பிடித்த கொட்டகைகளையும் அங்கு தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்களிடம் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார்.

அவர் கூறுகையில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் துணியில் மண்ணெண்ணெய்ஊற்றி தீப்பற்ற வைத்து உள்ளே தூக்கி வீசி உள்ளனர்.

இதில் தீப்பிடித்து 3 நபர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் பிடித்து விடுவோம் தொடர்ந்து 3 மாவட்ட எஸ்பிக்கள் 6 டிஎஸ்பிக்கள் 10 க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐக்கள் 100-க்கும் மேற்பட்ட போலீசார்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த கரும்பு ஆலை கொட்டைகை பகுதியில் வசித்து வரும் பொதுமக்களிடையே பதற்றமான நிலை நிலவி வருகிறது.

இதற்கு இடையில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது இதனால் இந்த பிரச்சனைக்கு காரணம் என்ன என்பதையும் குற்றவாளி யார் என்பதையும் சிபிசிஐடி விசாரணையும் முழுமையாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended