• முகப்பு
  • குற்றம்
  • எனது மகன் கொலைக்குக் காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ் பி மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை.

எனது மகன் கொலைக்குக் காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ் பி மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை.

மாரிமுத்து

UPDATED: May 29, 2023, 3:22:29 PM

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவை சேர்ந்த அர்ஜுன் இவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில் நான் சர்வேராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் எனக்கு சவுந்தரி என்ற மகளும் கலைச்செல்வன் என்ற மகனும் உள்ளனர் கலைச்செல்வனுக்கு சென்னையைச் சேர்ந்த முத்தையா மகள் நிவேதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு ஆறு மாத கைக்குழந்தை உள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எனது மகன் கலைச்செல்வன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறான்.

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தீயணைப்பு துறையில் கடந்த ஐந்து வருடங்கள் ஆக எனது மகன் பணிபுரிந்து வருகிறான்.

அவன் அங்கு உள்ள துறைமுக குடி இருப்பில் குடியிருந்து வருகிறான் கடந்த மாதம் 13ஆம் தேதி இரவு 10 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும் பணிக்கு செல்லாததால் குடியிருப்புக்கு வந்து சைபின் மற்றும் ஜீவராஜ் ஆகியோர் வீட்டில் பார்த்துள்ளனர்.

வீட்டுக்கு பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் எனது மகன் கலைச்செல்வன் கிடந்துள்ளான், இதனை அடுத்து துறைமுகம் மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்ற போது பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் இறந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது என்று கூறினார்கள்.

மறுநாள் 14 ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எனது மகனின் உடலை என்னிடம் ஒப்படைத்தார்கள் அப்போது நான் காவல்துறையினரிடம் எனது மகன் கொலை செய்யப்பட்டு உள்ளான் என்று கூறினேன் அதற்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கை வரட்டும் என்று கூறியுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் பல இடங்களில் காயங்கள் உள்ளது போல கால் பாதம் இரண்டு இடத்தில் திருக்கி. முறுக்கி உடைத்திருக்கிறார்கள். எனது மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர், இந்த கொலையில் எனது மகன் படுகொலையில் பாலமுருகன், முத்தையா, சாந்தி, நிவேதா உள்ளிட்ட பல பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

எனது மனைவியிடம் பேசி இரண்டு மணி நேரத்தில் எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளான் ஆகையால் இந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended