• முகப்பு
  • district
  • ஏழை எளிய மாணவர்களை விஞ்ஞானியாக ஆக்குவதே எனது லட்சியம் - டெல்லி பாபு விஞ்ஞானி.

ஏழை எளிய மாணவர்களை விஞ்ஞானியாக ஆக்குவதே எனது லட்சியம் - டெல்லி பாபு விஞ்ஞானி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அறிவியல் ஆராய்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் செங்கோல் பள்ளி முதல்வர் புனித வள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்திருந்த டெல்லி பாபு என்கிற விஜயகுமார் அவர்களை வரவேற்றனர். அப்துல் கலாம் குழுவில் பயணம் செய்த இவர் முதலில் மாணவர்களின் பொது அறிவுத்திறன் மற்றும் செய்முறை கண்காட்சியை பார்வையிட்டார், இதில் எட்டாம் வகுப்பு மாணவிகள் கண்பார்வையற்றோர் பயன்படுத்தும் சிக்னல் லைட் மனிதர்கள் மற்றும் வாகனங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு கண்பார்வையற்றோருக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக ஆராய்ச்சி செய்து வைத்திருந்தனர் , இதனை பார்த்த விஞ்ஞானி விஜயகுமார் மாணவ மாணவிகளை வெகுவாக பாராட்டினார். பின்னர் மாணவர்களின் முன்பு என் அம்மாவும் விஞ்ஞானிதான் என பெருமிதம் கொண்டார் , இந்நிலையில் நான் சிறு வயதாக இருக்கும் பொழுது எனது வீட்டில் மின்சாரம் இல்லை மண்ணெண்ணெய் விளக்கில் படித்து வந்தபோது சில நேரங்களில் விளக்கு அணைந்து விடும் , அப்போது வருத்தப்பட்ட எனக்கு ஆசிரியை ஹனி அதிக தன்னம்பிக்கை கொடுத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஆறு மாத காலம் எனது அம்மா சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த காசை வைத்து இன்னொரு மண்ணெண்ணெய் விளக்கு வாங்கிக் கொடுத்தார் , ஒரு விளக்கு அணைந்தவுடன் மற்றொரு விளக்கை ஏற்றி வைத்து படுப்பேன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றபோது நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்துப் படித்து கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் விருது பெற்ற உடனே டாக்டர் அப்துல்கலாம் குழுவில் வேலை பார்த்து வந்த போது சில ஆண்டுகள் கழித்து என்னை ஒரு விஞ்ஞானியாக ஆக்கினார்கள் . நான் எவ்வளவு சிரமப்பட்டு படித்து வந்தேன் என இதை பேசிய பொழுது அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்களில் கண்ணீர் வர தொடங்கியது. அதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் விவசாயிகள் , பிள்ளைகள் நல்ல முறையில் படித்து என்னை போன்றோ அல்லது மருத்துவராக வேண்டும். நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று நினைத்தாள் என்னால் ஆன உதவிகளை செய்துவிட்டு நான் பட்ட கஷ்டங்கள் நீங்கள் படக்கூடாது என மிக வருத்தத்தோடு மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார். இறுதியாக தவ அமுதம் பள்ளி தாளாளர் செங்கோல் , பள்ளி முதல்வர் புனிதவல்லி கனகதரன் , டாக்டர் நிஷாந்த் இவர்கள் முன்னிலையில் கண்காட்சியில் மனதை கவர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியதோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended