• முகப்பு
  • tamilnadu
  • 8 ஆவது நாளாக முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் ?

8 ஆவது நாளாக முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேலூர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஏழு பேரில் பேரறிவாளன் மற்றும் முருகன் மனைவி நளினி ஆகியோர் பரோலில் உள்ளனர் முருகன் மனைவி நளினியின் பரோல் நான்காவது மாதமாக தொடர்ந்து வருகிறது. இந் நிலையில் முருகனும் தனக்கு ஆரு நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி சிறைத் துறையிடம் மனு அளித்தார். இந்த மனுவை பாகாயம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளை காரணம் காட்டி சிறைத் துறை கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி நிராகரித்ததுடன், அது தொடர்பான காரணம் அடங்கிய கடிதத்தையும் முருகனுக்கு வழங்கியது. இதனையடுத்து தனக்கு பரோல் வழங்க கேட்டு முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்று 8 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந் நிலையில் நேற்று காலை வழக்கறிஞர் புகழேந்தி சிறையில் முருகனை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம், உண்ணாவிரதம் காரணமாக முருகன் சோர்ந்து உள்ளதாகவும், ஆரு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும், தெரிவித்தார். அதே நேரத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவிக்கும் அனுமதி கடிதத்தை சிறைத் துறை நிர்வாகத்திடம் முருகன் இதுவரை வழங்கவில்லை. அவருக்கு வழங்கப் படும் படிகளை அவர் வாங்க வில்லை. ஆனால், அவரது அறையில் நொறுக்குத்தீனிகள் உள்ளன. மேலும் அவர் கீரை வகைகளை நெய்யுடன் சேர்த்து எடுத்துக் கொள்கிறார். தண்ணீரும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனையும் செய்யப் படுகிறது. அவர் நல்ல நிலையில் உள்ளார் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended