• முகப்பு
  • district
  • கும்பகோணம் மாநகராட்சியில் கடைகளின் வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்.

கும்பகோணம் மாநகராட்சியில் கடைகளின் வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாமக குளம் பெரிய கடைத்தெரு மடத்து தெரு பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்கறி பூ பழங்கள் வணிகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வணிகம் செய்யும் சில்லறை வணிகர்களுக்கு விதிக்கப்படும் வாடகை வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வு தொடர்பாக தரைக்கடை வணிகர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் (CPI) நடைபெற்றது. வரி உயர்வு திரும்பப் பெறக் கோரி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மகாமக குளக்கரையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிக் வியாபாரிகள் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று மாநகராட்சி அலுவலகம் முன்பு உயர்த்தப்பட்ட வாடகை வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாநகராட்சி பழைய வாடகை ரூ 10 மட்டும் வசூலிக்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். தற்பொழுது தரைக்கடை 30 ரூபாயும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended